மிதமான அளவில் அருந்தப்படும் மது ஆரோக்கியமான இதயத்திற்கு காரணமாக இருக்கும். தினமும் பெண்கள் ஒரு குவளை மதுவும் ஆண்கள் இரண்டு குவளை மதுவும் அருந்தினால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோயினால் இறப்பு ஆகியவை ஏற்படுவதற்கான அபாயம் மிகக் குறைவு. (அதிகமாகக் குடித்தால் நிச்சயமாக இந்த நன்மைகள் குறைந்து இதய பிரச்சினைகளினால் ஆபத்து அதிகரிக்கும்.)

ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டன் நாட்டில் வசிப்பவர்களின் 12 வெவ்வேறு இதய நோய்களுக்கும் மது அருந்துதல் பழக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்தனர். ஆய்வு தொடங்கிய போது எவருக்கும் இருதய நோய் இல்லை.

மிதமான மது அருந்தியவர்களோடு ஒப்பிடும்போது, மது அருந்தாதவர்களுக்கு 12% முதல் 56% வரை, எட்டு இதய நோய்களுக்கான ஆபத்து அதிகரித்திருந்தது. பொதுவான இதய நிகழ்வுகளான மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் திடீர் இதயம்-தொடர்பான மரணம் ஆகியவை இந்த எட்டு இதய நோய்களில் உள்ளடங்கும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு குவளைகளில் மது அருந்தியவர்களோடு ஒப்பிடும்போது, மது அருந்தாதவர்களுக்கு நிலையற்ற மார்பு நெறிப்பு (அதாவது இந்நிலையில் இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டம் இருக்காது) ஏற்பட 33% அதிகமான ஆபத்து உள்ளது மற்றும் இதய நோயினால் எதிர்பாராத விதமாக இறப்பதற்கான வாய்ப்பு 56% அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்தனர்.

ஆனால் மது நான்கு குறைந்த பொதுவான இதயப் பிரச்சினைகளுக்கு எதிராகப் பாதுகாப்பு வழங்குவதாகத் தெரியவில்லை: மூளைப் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் தடுக்கப்படும் போது குறுகிய காலத்திற்கு ஏற்படும் சில வகையான மிதமான பக்கவாதம் மற்றும் மூளையில் இரத்தப்போக்கு ஏற்படுவது ஆகியவற்றை மதுவால் தடுக்க முடிவதில்லை.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பொதுவாக இம்மாதிரியான ஆய்வுகளில் எப்பொழுதும் நடப்பது போல் ஆராய்ச்சியாளர்கள் குடிகாரர்களை மொத்தமாக ஒரு குழுவாகப் பிரித்துத் தனியாக வைத்தனர். “குடிகாரர்கள் அல்லாதவர்களில்” குடிப்பழக்கமே இல்லாதவர்களும் அடங்குவர், அதே சமயம் குடித்து விட்டு அப்பழக்கத்தை விட்டவர்களும் (கடந்த காலத்தில் அதிகமாகக் குடித்தவர்களாக இருக்கலாம், அதனால் அவர்களுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கலாம்) உள்ளடங்குவர். தற்போதைய ஆய்விலிருந்து மது ஏன் சில இதய பிரச்சினைகளின் ஆபத்தைக் குறைக்கிறது என்றும் மற்றவற்றை ஏன் குறைப்பதில்லை என்றும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மரபணு தொற்றுநோய் ஆசிரியரும் இந்த ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளருமான ஸ்டீவன் பெல் அந்தக் கேள்விக்கானப் பதிலைக் கண்டுபிடிக்க மற்றொரு ஆய்விற்க்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்று அவர் கூறுகிறார்.

“வெவ்வேறு ஆபத்துக் காரணிகள் எப்படி வெவ்வேறு நோய்களுக்குத் தொடர்புடையதாக இருக்கிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம்,” என்று அவர் கூறுகிறார். எதிர்கால ஆய்வுகளில், பல்வேறு வகையான மது அதாவது பீர் அல்லது ஸ்பிரிட் ஆகியன இதய நோய் அபாயத்திற்கு எவ்விதமான மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்படும்.

இதற்கிடையில், ஒவ்வொரு வாரமும் சிறிதளவு மது அருந்துபவர்களுக்கு ஆய்வின் முடிவு உறுதியளிக்க வேண்டும் என்று பெல் கூறுகிறார். ஆனால் இதய நோயைத் தடுக்கும் என்ற காரணத்திற்காக தற்போது குடிப்பழக்கம் இல்லாதவர்களைக் குடிக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. ஏனெனில் மதுவினால் கல்லீரல் நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதால், அதனைக் குறைக்க புகைபிடிப்பதை விட வேண்டும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும் என்று அவர் கூறுகிறார்.