வைகோவை தகாத வார்த்தைகளால் ஏசிய போதை வழக்கறிஞர்கள் ரஜினி மன்றத்தினர்

தூத்துக்குடியில் வைகோவை தரக்குறைவாக பேசிய போதை வழக்கறிஞர்கள் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், தூத்துக்குடி இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில்  மதுபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ் மற்றும் முத்தையாபுரத்தை சார்ந்த வெற்றிவேல் ஆகிய இருவரும் மதுபோதையில் வைகோவை பார்த்து தரக்குறைவாக கூச்சல் போட்டனர். இதையடுத்து வைகோவுடன் வந்த ம.தி.மு.க.வினர், அந்த இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாறியது.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அந்த இரு போதை வழக்கறிஞர்களும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சமூகவலைதளங்களில பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், அந்த போதை வழக்கறிஞர்கள் இருவரும் தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று நாம் தமிழர் கட்சி மறுத்துள்ளது. மேலும், அந்த இருவரும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில், போதை வழக்கறிஞர்களில் ஒருவரான ஜெகதீஷ் படத்துடன் அவரது பெயர், ரஜினி மன்ற போஸ்டரில் இருக்கும் படத்தை நாம் தமிழர் கட்சியினர் சிலர் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.