சென்னை,

புத்தாண்டு தினத்தில் மட்டும் மது விற்பனை இலக்கை தாண்டி விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு மதுப்ரியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது உறுதியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும்  அரசே மதுவிற்பனையை டாக்மாக் நிறுவனம் மூலம் கடை நடத்தி, விற்பனையை  ஊக்குவித்து வருகிறது. அரசுக்கு வருவாயை ஈட்டும் வகையில் நாட்டு மக்களை குடிகாரர்களாக மாற்றி வருகிறது.  இதன் காரணமாக தமிழகத்தில்  குடிகாரர்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றனர்.

இந்நிலையில், புத்தாண்டையொட்டி, டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு மதுவிற்பனை 200 கோடிக்கு இலக்கு வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.175 கோடி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தன்படி டிச.31 மற்றும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது.   ரூ.200 கோடி இலக்கு வைக்கப்பட்ட நிலையில் இலக்கை தாண்டி மதுவிற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனை ஆகியுள்ளது.

தற்போது மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்துள்ள நிலையிலும் இலக்கை தாண்டி விற்பனையாகி இருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்பார்த்ததைவிட அதிகளவு விற்பனையாகி மது விற்பனையாகி இருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவது உறுதியாகி உள்ளது.

அரசே குடிமக்களை குடிகாரர்களாக மாற்றி வருவது வேதனையானது….