ஆரியின் ‘அலேகா’ ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு….!

நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட ஆரி அதன்பின்னர் நடித்த படங்கள் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. இருப்பினும் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் இவர் மனதை கொள்ளை கொண்டார். தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஆரி நடிப்பில் உருவாகி வரும் அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அய்யனார் புகழ் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்கத்தில் நடிகர் ஆரி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் அலேகா. இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். யுகபாரதி, விவேகா, லவரதன் ஆகியோர் படத்திற்கு பாடல் வரிகள் அமைத்துள்ளனர்

நடிகர் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தாவின் கால்கள் படுக்கையறையில் பின்னி பிணைந்து இருக்கும் படி ஏற்கனவே வெளியான படத்தின் டைட்டில் லுக் போஸ்டருக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.