வாகன ஓட்டிகளே உஷார்: தினமும் மாறுது பெட்ரோல் விலை!

டில்லி.

நாட்டில் தங்கம் விலை தினசரி மாறி வருவதுபோல பெட்ரோல் விலையிலும் தினசரி மாற்றம் செய்ய பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்து வருகின்றன.

அதன்படி தற்போது  ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையை மாற்றி, அன்றைய  கச்சா எண்ணையின் சந்தை விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த விலை நிர்ணயம்  முதன்முதலாக புதுச்சேரி,  விசாகப்பட்டினம் (ஆந்திரா), உதய்பூர் (ராஜஸ்தான்),   ஜாம்ட்ஷெட் பூர் (ஜார்க்கண்ட்),  சண்டிகர் ( அரியானா) ஆகிய ஐந்து நகரங்களில் வரும்  மே, 1ம் தேதி முதல் பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த குறிப்பிட்ட  ஐந்து நகரங்களில், 200 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்த நகரங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சிக்கல்களை ஆய்வு செயது, அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இனிமேல் தங்கம் விலையை போல பெட்ரோலிய பொருட்களின் விலையையும் மாற்றி அமைக்க தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.