விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

ரஷ்யாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரரும், ரஷ்ய வான்படையின் ஜெனரலாகவும் இருந்த அலெக்சி லியோனொவ், 1965ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி விண்வெளி பயணத்தின் போது, விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்தார். இதன் மூலம், விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்று வந்த இருந்த லியோனொவ், மாஸ்கோவில் இன்று காலமானார்.

லியோனொவ் மறைவுக்கு இந்தியாவின் இஸ்ரோ அமைப்பும், நாசாவும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.