அல்ஜீயர்ஸ்:

அல்ஜீரியா நாட்டில் காவல்நிலையத்தை தகர்க்க வந்த ஐஎஸ்எஸ் தற்கொலை படை தீவிரவாதியை தடுத்த போலீஸ்காரர் குண்டுவெடிப்பில் சிக்கி இறந்தார்.

வட ஆப்ரிக்காவின் அல்ஜிரியா நாட்டின் தலைநகரான அல்ஜியர்ஸ் மேற்கு பகுதியில் உள்ள தியரத் காவல்நிலைய வாசலில் தயாவ் ஐசாவி என்ற போலீஸ்காரர் கடந்த 31ம் தேதி பாதுகாப்பு பணியில் ஈ டுபட்டிருந்தார்.

அப்போது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் காவல்நிலைய வாசலில் வந்து தனது உடலில் கட்டியிரு ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது இதை கண்ட தயாவ் ஐசாவி வேகமாக பாய்ந்து அந்த தீவிரவாதியை தள்ளிவிட்டு மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் தீவிரவாதியும், தயாவ் ஐசாவியும் உடல் சிதறி இற ந்தனர். அதோடு அருகில் இருந்த மற்றொரு போலீஸ்காரரும் குண்டு காயமடைந்து பின்னர் இறந்தார்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல்ஜீரியாவில் இருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிராவதிகள் ராணுவத்தின் தொடர் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் நாட்டை விட்டு ஓடினர். இந்நிலையில் பல மாதங்களுக்கு பின் தற்போது முதன்முதலாக தற்கொலை படை தாக்குதல் நட ந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் கான்ஸ்டன்டைன் காவல்நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. அதற்கு முன் பிப்ரவரியில் தற்கொலைப் படை தீவிரவாதியை போலீஸ்காரர் ஒருவர் சுட்டு வீழ்த்தினார். இந்த இரு சம்பவங்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது.

மக்ரேபில் உள்ள அல்கொய்தா அமைப்பின் வட கொரியா குழுவினர் அல்ஜீரியாவில் தெற்கு மற்றும் கிழ க்கு பகுதிகளில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலில் பாதுகாப்பு படையினர் இந்த ஆண்டில் மட் டும் 12 தீவிரவாதிகளை கொன்றுள்ளனர்.