காதலர் ரன்பீர்கபூர் வசிக்கும் குடியிருப்பில் ரூ. 32 கோடியில் புது வீடு வாங்கிய அலியா பட்

 

பிரபல இந்தி நடிகை அலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நெருக்கமாக பழகி வருவது ஊர் அறிந்த தகவல். இப்போது இருவரும் ‘பிரமாஸ்திரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள்.

தெலுங்கில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கும் ‘RRR’ படத்தில் ராம் சரண் ஜோடியாக அலியா நடித்து வருகிறார்.

அலியாவுக்கு லண்டனில் உள்ள கோவேந்த் கார்டனில் சொந்த வீடு உள்ளது.

மும்பையின் ஜுகு பகுதியில் உள்ள குடியிருப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு 13 கோடி ரூபாய் மதிப்பில் ‘பிளாட்’ ஒன்று வாங்கியுள்ளார்.

தனது சகோதரி ஷகீன் பட்டுடன், ஜுகு வீட்டில் வசித்து வரும் அலியா பட், பாந்த்ரா பகுதியில் மேலும் ஒரு ‘பிளாட்’ வாங்கியுள்ளார். இந்த குடியிருப்பில் தான் அவரது ஆண் நண்பர் ரன்பீர் கபூர் குடியிருந்து வருகிறார்.

அலியா வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு 32 கோடி ரூபாய் ஆகும்.
ரன்பீர் 7 – வது தளத்தில் குடியிருக்க, அலியா 5- வது தளத்தில் குடியேறியுள்ளார்.

தீபாவளி தினத்தன்று புதிய வீட்டுக்கு குடியேறினார், அலியா. இந்த வீட்டை அலியாவுக்கு ரன்பீர் கபூர் வாங்கி கொடுத்துள்ளார் என அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

– பா. பாரதி