தாய்க்கும், மகளுக்கும் இடையேயான பாசத்தை விளக்கும் வகையில் இந்தியில் ‘டார்லிங்ஸ்’ என்ற படம் தயாராகிறது.

மகளாக அலியா பட் நடிக்க, அம்மா வேடத்தில் ஷெபாலி ஷா நடிக்கிறார்.

இந்தி நடிகர் ஷாரூக்கான், இந்தப் படத்தை தயாரிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கதாநாயகியாக நடிக்கும் அலியா பட்டும், இந்த படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.

ஷாருக்கானுடன், சேர்ந்து ‘டார்லிங்ஸ்’ படத்தை தயாரிப்பதாக அலியா தெரிவித்துள்ளார்.

மும்பையை கதைக்களமாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாய்க்கும், மகளுக்கும் நேரிடும் சிக்கலையும், அதில் இருந்து அவர்கள் எப்படி விடுபட்டார்கள் என்பதையும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லும் படம் இது.

ஜஸ்மித் கே..ரீன் என்ற அறிமுக இயக்குநர் ‘டார்லிங்ஸ்’ படத்தை இயக்குகிறார்.

படத்தயாரிப்பில் முதன் முறையாக தான் இறங்குவதை தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அலியா வெளியிட்டுள்ளார்.

“சட்டப்பூர்வ எச்சரிக்கை. பெண்களிடம் மோதினால், உடம்புக்கு கேடு” என படத்தின் கதையை நகைச்சுவையாக தெரிய படுத்தி உள்ளார், அலியா பட்.

– பா. பாரதி