ராஜமௌலியின் RRR படத்திலிருந்து வெளியேறுகிறாரா ஆலியா பட்….?

‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக RRR ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் இந்த படத்தில் இருந்து வெளியேறவுள்ளார் என செய்திகள் பரவி வருகிறது. இநத படத்தில் தான் ஆலியாவுக்கும் மிகவும் சிறிய ரோல் என காரணமும் கூறுகின்றனர்.