Random image

24 மணி நேரத்தில் அலியாபட்டுக்கு எதிர்ப்பு 5 லட்சம் ஆனது..

எந்த ஒரு படத்தின் போஸ்டர், டிரெய்லர் வெளியாகும்போதும் அதற்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவியும் ஆனால் பிரபல நடிகையின் டிரெய்லருக்கு 5 லட்சம் (மில்லியன்) டிஸ்லைக்குகள் குவிந்து அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.


அலியாபட், சஞ்சய் தத் நடித்திருக்கும் படம் சதக் 2. இப்படத்தை மகேஷ்பட் இயக்கி உள்ளார்.இதன் டிரெய்லர் வெளி யானது, அடுத்த 24 மணி நேர்த்தில் 5 லட்சம் மில்லியன் டிஸ்கைக்குக்ள யூடியூபை நிரப்பி அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
டிரெய்லரை பார்க்கும்போது வழக்கமான ஒரு பேய் படமாக தோன்றுகிறது. காட்சி களில் குளறுபடியும் தெரியவில்லை. ஆனால் 5 லட்சம் டிஸ்லைக் என்பது டிரெய்லர் மீது காட்டப்பட்ட வெறுப்பாக தெரியவில்லை அதில் நடித்திருக்கும் நடிகை அலியாபட் மீது காட்டப்பட்டிருக் கும் வெறுப்பு என்று கருதப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக்கொண்டார். அதற்கு முன்னதாக ஒரு பேட்டியில் சுஷாந்தை பற்றி கேட்டபோது, அவர் யார் என்று எனக்கு தெரியாது என அலியாபட் கூறினார், மேலும் சுஷாந்த் இறந்த பிறகு அதுபற்றி கருத்து எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். அந்த கோபத்தை தற்போது ரசிகர்கள் அலியாபட் நடித்த படத்தின் டிரெய்லர் மீது காட்டியிருக்கி றார்கள். என்று தெரிகிறது.

முன்னதாக 12 மணி நேர்தில் அலியாபட்படத்துக்கு  ஒன்றை லட்சம் டிஸ்லைக் வந்திருந்தது.