Random image

சீனாவின் மிகபெரிய “ அலிபாபா “ வர்த்தக நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பதவி விலகல்

சீனாவில் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவரான ஜாக் மா தனது பதவியில் இருந்து திங்கட்கிழமை ஓய்வு பெற்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கல்வியை நேசிப்பதாகவும், அதற்காக கவனம் செலுத்த உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

alibaba

சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் நிர்வாக தலைவரான ஜாக் மா அந்நாட்டின் முதல் பெரிய பணக்காரர் ஆவார். உலக கோடீஸ்வரர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் ஒருவரான ஜாக் மா உலகின் 6வது பெரிய இணைய தளத்தை தொடங்கி வர்த்தகம் செய்து வந்தார். அவர் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் வேலை கிடைக்காமல் அலைந்தார். பல முயற்சிக்குப் பின்னர் சீனாவின் அரசு சம்மந்தப்பட்ட வேலையில் குறுகிய காலம் பணிபுரிந்தார் ஜாக் மா, அந்த வேலை மூலமாக கிடைத்த தொடர்புகளை வைத்து 18 நபர்களை தேர்வுசெய்து தனது வீட்டிலையே அலிபாபா எனும் நிறுவனத்தை உருவாக்கினார்.

அவர் நிறுவனத்துக்கு நீதி மறுக்கப்பட்ட பொழுதும் அவரின் விடா முயற்சியால் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் சாப்ட் பேங்க் மூலம் முதலீடு பெற்றார். இந்த முதலீட்டின் மூலம் சீனாவில் அலிபாபா நிறுவனத்தை வலுப்படுத்தினர் அதைத் தொடர்ந்து சர்வதேச அளவுக்கு விரிவடைந்தது ஜாக் மாவின் அலிபாபா. 2014 ஆண்டு உலகின் மிகப் பெரிய ஐபிஓ ஆனது அலிபாபா. நியூயார்க் பங்குச்சந்தை மூலம் 25 பில்லியன் டாலர் முதலீட்டினை திரட்டினார். இவர் உருவாக்கிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தற்போது, உலகளவில் 6வது இடத்தில் உள்ளது.

வர்த்தகத்தில் புரட்சி செய்த ஜாக்மா வை சீனாவில் உள்ள பலரும் கடவுளாகவே பார்க்கிறார்கள். வேலைவாய்ப்பில்லாமல் இருந்த சீனர்களுக்கு ஜாக்மா உருவாக்கி கொடுத்ததன் காரணமாக பலர் அவரை கடவுளாகவே வணங்கி வருகின்றனர். இந்நிலையில், வர்த்தகத்தில் சாதனை நிகழ்த்திய ஜாக் மா 54வயதை அடைந்துள்ளதால் ஓய்வு பெற விரும்பினார். தற்போது அவரின் கவனம் கல்வியின் பக்கம் திரும்பி உள்ளது. திங்களன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜாக்மா, “ இது ஒரு யுகத்தின் முடிவல்ல, ஒரு சகாப்தத்தின் ஆரம்பம், கல்விக்காக என்னுடைய நேரத்தையும், செல்வத்தையும் செலவழிக்க விரும்புகிறேன். நான் கல்வியை விரும்புகிறேன் “ என்று தெரிவித்தார்.