லிகார்

லிகார் முஸ்லிம் பலகலைக்கழகத்தின் 14 மாண்வர்கள் மீதான தேசத் துரோக குற்றசாட்டை திரும்பப் பெற அலிகார் காவல்துறை முடிவு எடுத்துள்ளது.

கடந்த 12 ஆம் தேதி அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சந்தத்தினர் மஜிலிஸ் ஈ கட்சி தலைவரான அசாதுதின் ஓவைசியை ஒரு நிகழ்வில் கலந்துக் கொள்ள அழைத்துள்ள்னர்.   அவர் வருகையை எதிர்த்து பாஜக மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மோதலில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் வாகனங்களை எரித்ததாக பாஜகவினரால் புகார் அளிக்கப்பட்டது.    அப்போது செய்தி சேகரிக்க வந்த ரிபப்ளிக் டிவியின் செய்தியாளர்கள் நளினி சர்மா உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதை ஒட்டி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் தலைவர் உள்ளிட்ட 14 பேர் மீது தேசத்துரோகம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில் இன்று அலிகார் நகர காவல்துறை மூத்த அதிகாரி அகாஷ் குலஹரி, “இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்தனர்.   விசாரணையில் தேசத் துரோக குற்றச்சாட்டு பதியும் அளவுக்கு வன்முறை நடைபெறவில்லை என தெரிய வந்துள்ளது.   அத்துடன் இந்த சம்பவங்கள் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேலும் பல்கலைக்கழகம் இது குறித்து அமைத்த விசாரணைக் குழு அறிக்கையையும் படித்தோம்.   அதிலும் இந்த மாணவரக்ள் தேசத் தூரோக குற்றம் எதுவும் செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.    ஆகவே இந்த 14  மாணவர்கள் மீதான தேசவிரோத குற்றச்சாட்டை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளொம்” என தெரிவித்துள்ளார்.