ராஜீவ்காந்தியின் ‘பாரத ரத்னா’ திரும்பபெறும் தீர்மானம்: ஆம்ஆத்மி பெண் எம்எல்ஏ ராஜினாமா?

டில்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள பாரதி ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று டில்லி சட்டமன்றத்தில் ஆம்ஆத்மி கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம்ஆத்மி எம்எல்ஏவான அல்கா லம்பா எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு  ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. ஆனால், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சமீபத்தில் சஜ்ஜன் குமாருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதால், ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற  வேண்டும் என்று வலியுறுத்தி  டில்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

1984ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை அரங்கேறியது. இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், டில்லி காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன்குமார் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதையடுத்து,  ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட ‘பாரத ரத்னா’  விருதினை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான எம்.எல்.ஏ அல்கா லம்பா எதிர்ப்பு தெரிவித்தார்.  இதன் காரணமாக,  ஆம் ஆத்மி கட்சி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதன் காரணமாக அல்கா அவரது கட்சிப் பதவியையும் எம்.எல்.ஏ பதவியை யும் ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார். இது ஆம்ஆத்மி கட்சியினரிடையே அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

டில்லியில்  ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் அல்கா லம்பா.  இதுகுறித்து அவர் கூறியதாவத, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நாட்டிற்காக நிறைய தியாகம் செய்திருக் கிறார். அவருக்கு வழங்கப்பட்ட  பாரத ரத்னாவை எடுத்துக் கொள்வதற்கு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. நான் கட்சியின் முடிவை எதிர்த்து நின்றதால், ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டனர்”. அதனால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி