டில்லி

த்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி முதல் கட்டமாக ஜனவரி 16 முதல் கொரோனா முன் களப்பணியாளர்கள் . சுகாதார ஊழியர்கள், உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  அதன் பிறகு இரண்டாம் கட்டமாக மார்ச் 1 முதல் 60 வயதை தாண்டியோருக்கும் 45 வயதைத் தாண்டி இணைநோய் உள்ளோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 45 வயதை தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி  போடும் பணி தொடங்கி உள்ளது.  தற்போதைய நிலையில் இளம் வயதுடையோர் கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.  இதையொட்டி மாநில முதல்வர்கள் பலர் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று  மே மாதம் 1 ஆம் தேதிமுதல் 18 வயதை தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அர்சு அறிவித்துள்ளது.    இன்றைய அறிவிப்பில் காணப்படும் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :

  • வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.  இதையொட்டி தடுப்பூசி மருந்துகள் அதிக அளவில் தேவைப்படுவதால் மருந்து தயாரிப்பாளர்கள் தங்களது மாதாந்திர உற்பத்தியில் 50% மருந்துகளை  மத்திய அரசுக்கும் மீதமுள்ள 50% மருந்துகளை மாநில அரசு மற்றும் தனியார் விற்பனைக்கு அளிக்க வேண்டும்.
  • இவ்வாறு மாநில அரசுகள் மற்றும் வெளிச்சந்தை விற்பனைக்கு அளிக்கும் 50% மருந்துகள் விலை மற்றும் உற்பத்தி விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.   இந்த விலை அறிவிப்பின் அடிப்படையில் மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.   இந்த விற்பனை மற்றும் மத்திய அரசுக்கு அளிக்கப்படும் மருந்துகள் அனைத்தையும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட பயன்படுத்த வேண்டும்
  • இந்த தடுப்பூசிகள் அனைத்து அரசு தடுப்பூசி மையங்களிலும் இலவசமாக அளிக்கப்படும்.  இந்த மையங்களில் தகுதி உடைய அனைவரும் மற்றும் ஏற்கனவே ஊசி போட்டுக் கொள்ளாத பிரிவினரும் இலவசமாகத் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து தடுப்பூசி மருந்துகளும் 50% மத்திய அரசுக்கும் மீதமுள்ளவற்றை மாநில அரசுகள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்வது கட்டாயமாகும்.  ஆயினும் இவற்றுக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால் மத்திய அரசு அனுமதியுடன் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்.
  • மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள மருந்துகளை அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையைப் பொறுத்துப் பகிர்ந்து அளிக்கப்படும்.   எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை டோஸ்கள் வழங்கப்படும் என்பதை முன் கூட்டியே அறிவிக்கப்பட உள்ளதால் அதிக தேவைக்கு மட்டும் மாநில அரசுகள் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.,