டில்லி

நடந்து முடிந்த 16ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் தனியாக தொழில் புரியும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் ஜிஎஸ்டி யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ 20 லட்சத்துக்கு குறைவாக கட்டணமுள்ள எந்த ஒரு வழக்குக்கும் ஜிஎஸ்டி சட்டம் பொருந்தாது.

அந்த வரைமுறக்குள் உள்ள எந்த ஒரு சட்ட நிகழ்வுக்கும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு வரியும் விதிக்கப்படமாட்டாது.

இது தனியாக தொழில் புரியும் மூத்த வழக்கறிஞர்கள் உட்பட எல்லா வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும்.

அதாவது தனி மனிதர் அல்லது தனி நிறுவனத்துக்கு நடத்தப்படும் அனைத்து வழக்குகளுக்கும் இது பொருந்தும்.

ஒரு நிறுவனத்தின் மத்தியஸ்த வழக்கு (arbitral tribunal) ரூ. 20 லட்சத்துக்கு குறைவாக இருப்பின் அதுவும் இந்த சட்டத்தின் கீழ் வரும்

ஆனால் இதுவே ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் தன் நிறுவனத்துக்கோ அல்லது மற்றொரு சட்ட நிறுவனத்துக்கோ பணி புரியும் போது இந்த சட்டம் பொருந்தாது.