டெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,  மாற்றம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அதன்படி, நாளை முதல் அனைத்து வங்கிகளும், காலை 10 மணி முதல் பிற்பகல்4  மணி வரை வழக்கமான நேரங்களிலேயே செயல்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பணியான வங்கிப் பணிகளின் நேரமும் குறைக்கப்பட்டது. அதன்படி,  வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நாளை முதல் வங்கிகள் வழக்கம்போல காலை 10 மணி முதல் 4 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்உள்ள அனைத்து வங்கிகளும், காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரையில் இயங்க வேண்டும் என, வங்கிகள் கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிzzகையில், கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நிவாரண நிதியுதவிகளையும், முதியோர் ஓய்வூதிய தொகையையும், அவற்றின் பயனாளர்களான பொதுமக்கள், வங்கிகளுக்கு நேரில் வந்து தடையின்றி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் .

வாடிக்கையாளர்கள் வரும்போது, சானிடைசரால் கைகளை தூய்மை செய்து கொள்வதை உறுதி செய்வதோடு, குறைந்தபட்சம் ஒரு மீட்டர் என்ற சமூக விலகலை கடைபிடிக்கவும், வங்கிகள் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.