அனைவரும் இனி நிம்மதியாக உறங்கலாம் : டிரம்ப் டிவீட்

வாஷிங்டன்

ட கொரியாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுளதால் இனி அனைவரும் நிம்மதியாக உறங்கலாம் என அமெரிக்க அதிபர் டிவிட்டரில் பதிந்துள்ளார்.

நேற்று அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.    இரு நாடுகளும் இணைந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.   அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிட வட கொரியாவும்,  வட கொரியாவுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன.

அமெரிக்காவுக்கு திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை அளித்துள்ளார்.  அதில்,  “தற்போது நான் மிகப் பெரிய பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பி உள்ளேன்.  அமெரிக்க அதிபராக நான் பதவி ஏற்றதில் இருந்து தற்போது தான் அனைவரும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.    இனி எக்காலத்திலும் வட கொரியாவிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது.

இந்த சந்திப்பு எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.   வட கொரியாவுக்கு சர்வ தேச அளிவில் மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது.    வட கொரியாவுடம் அமெரிக்கா போர் புரியும் என பலரும் இதற்கு முன்பு எதிர்பார்த்தனர்.  அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமாவும் வட கொரியா நமது முக்கிய எதிரி என குறிபிட்டிருந்தார்.   தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால் அனைவரும் நிம்மதியாக உறங்கலாம்” என தெரிவித்துள்ளார்.

You may have missed