பெங்களூரு:

ட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் கர்நாடக காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 12ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள நிலையில், அங்கு நடைபெற்று வரும் அரசியல் சதுரங்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நீடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும், சட்டமன்ற கூட்டத்துக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவிட்டு உள்ளார்.

சித்தராமையா

குமாரசாமி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ என மொத்தம் 14 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ள  நிலையில், கூட்டணி அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்களான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணு கோபால், பெங்களூருவில் முகாமிட்டு ஆட்சியை தக்க வைப்பது பற்றி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும், சட்டமன்ற கூட்டத்துக்கு கண்டிப்பாக வரவேண்டும்  கொறாடா உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா,  பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய நிலையில்தான் காங்கிரஸ், மத சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைந்தது என்றும்,  கடந்த ஓராண்டு காலமாக ஆட்சியில் நீடித்து வருகிறோம் என்று கூறினார்.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் பாரதிய ஜனதா கட்சி தற்போது 6-வது முறையாக ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்கிறது  என்று குற்றம் சாட்டியவர்,  கட்சி முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டதாக 14 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.