அடைக்கப்பட்ட கதவுகள்: மனைவியின் உடலை இரவு முழுதும் தூக்கி அலைந்த மனிதர்

நெட்டிசன்:

டி.என். கோபாலன் அவர்களின் முகநூல் பதிவு:

வாடகை வீட்டில்பிணத்தை வைப்பதற்குஅனுமதி மறுக்கப்பட்டதால், இளைஞர் ஒருவர், தனது மனைவியின் உடலுடன் இரவு முழுவதும் ஆம்புலன்ஸிலேயே சுற்றி அலைந்தகொடுமையான சம்பவம் தில்லியில் நடந்துள்ளது.

கிழக்கு தில்லியில் உள்ளகர்கர்தூமா கிராமத்தில் வசிப்பவர் சோட்டே லால்(36). அப்பகுதியில் சிறியடீக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி அஞ்சு (35). சில நாட்களுக்கு முன்பு அஞ்சுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே, அவரைஅருகில் உள்ள மருத்துவமனையில் சோட்டே லால் சேர்த்துள்ளார். அங்கு அஞ்சுவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிக்குன் குன்யா நோய்த்தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அஞ்சு அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சைபலனின்றி திங்கட்கிழமை மாலை அஞ்சு உயிரிழந்தார்.அதைத் தொடர்ந்து, மனைவியின் உடலை, தான்தங்கியிருக்கும் வாடகை வீட்டில் வைப்பதற்காக சோட்டே லால் கொண்டுசென்றுள்ளார்.

சோட்டே லால்(
சோட்டே லால்(

 

ஆனால்,அங்கு உடலை கிடத்துவதற்கு வீட்டு உரிமையாளர் அனுமதியளிக்கவில்லை. வீட்டின் முன்பாகவாவது உடலை வைத்துக் கொள்கிறேன் என்று சோட்டே லால்கெஞ்சியுள்ளார். அதற்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அஞ்சுவின் உடலைப் பார்த்து, தங்களின் குழந்தைகள் பயப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.இதனால், சோட்டே லால், தனது வீட்டில் உள்ள பொருட்களை அடமானம் வைத்து ஆம்புலன்ஸ் ஒன்றை அமர்த்தினார். பின்னர் தனது மனைவியின் உடலை அதில் ஏற்றி எங்கு செல்வதென்று தெரியாமல் இரவு முழுவதும் சுற்றி அலைந்துள்ளார்.

ரிவர் மால் பகுதி அருகேநள்ளிரவு 2.30 மணியளவில் ஆம்புலன்ஸ் செல்வதைக் கண்ட ரோந்து வாகனபோலீசார், அதனை நிறுத்தி விசாரித்தபோது, சோட்டே லாலின் துயரமான நிலை தெரியவந்தது.அதன் பின்னர், அப்ப்பகுதியில் வசிக்கும் பன்வார் சிங் என்ற தொழிலதிபரைத் தொடர்பு கொண்ட போலீசார், அவரது வீட்டில் இரவு மட்டும்அஞ்சு-வின் உடலை வைத்துக் கொள்ள அனுமதிக் கேட்டனர்.

இதற்கு பன்வார் சிங் ஒப்புக் கொண்டதையடுத்து, அஞ்சு-வின் உடலை அங்கு கொண்டு சென்றனர்.பின்னர், செவ்வாய்க்கிழமை காலையில் இறுதி நிகழ்ச்சிகளுக்குப் பின், அஞ்சுவின் உடல் போலீசாரின் உதவியுடன்தகனம் செய்யப்பட்டுள்ளது.இறந்தவரின் உடலை வீட்டில் வைப்பதற்கு கூடஅனுமதி தராத சோட்டே லாலின், வீட்டு உரிமையாளர் பப்லுவை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், அவரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். மனைவியின் உடலைவைப்பதற்குக் கூட இடமின்றி ஆம்புலன்ஸிலேயே ஒருவர் சுற்றித்திரிந்த சம்பவம், தலைநகர் தில்லிக்கு ம் மனித சமூகத்திற்கும் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.