டெல்லி:

லியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய டாக்டர் ராமமூர்த்தி, இதற்கான உதவிய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவ்யல் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அங்கு பெற்ற அனுபவங்களை வாழ்வில் மறக்க முடியாதவை என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,‘‘ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி என்னை வற்புறுத்தின £ர்கள். ஆனால் நான் யாருக்கும் அறுவை சிகிச்சை செய்யவில்லை. இதற்காக அவர்கள் என்னை உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை. ஆனால் மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்.

அவர்கள் எல்லோரும் படித்த இளைஞர்கள். அவர்கள் இந்தியாவை பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். அனைத்து   தகவல்களும் அவர்களின் கைவசம் உள்ளது. ஒரு நாள் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் எனது அறைக்கு வந்தனர். என்னை அவர்களுடன் வருமாறு அழைத்தனர். என்னுடன் இன்னொரு இந்தியரும் இருந்தார். இருவரையும் சிர்டே சிறைக்கு அழைத்துச் சென்றனர்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘சிறையில் லிபியா அருகில் பிடிபட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் இருந்தனர். அவர்கள் 2 மாதங்களாக அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஈராக், சிரியா, நைஜீரியா ஆகிய இடங்களில் போராளிகள் செய்த செய்லகளின் வீடியோக்களை பார்க்க சொல்லி வற்புறுத்தினர். அதை ப ர்ப்பதற்கே கடினமாக இருந்தது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்லாம் குறித்து பாடம் நடத்தினார்கள்.

தினமும் 5 முறை எப்படி தொழுக வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர். தொழுகைக்கு முன் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினர். இப்படியே 2 மாதங்கள் ஓடின. அதன் பிறகு மற்றொரு பாதாள சிறைக்கு எங்களை கொண்டு சென்றனர்’’ என்றார்.

‘‘அங்கிருந்து ஒரு மாதத்திற்கு பிறகு சிர்டேயில் உள்ள மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு துர் க்கி, கொரிய மக்கள் சிலர் இருந்தனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாம் குறித்து பாடம் எடுத்தார்கள். அவர்களின் சட்ட திட்டங்களை எடுத்து கூறினர்.

அந்த சமயம் லிபியா மிசுரதா ராணுவப் படைகள் ஐஎஸ்ஐஎஸ்.க்கு எதிரான போர் அறிவிப்பை வெளியிட்டது. குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததால் சிறை கைதிகளை வேறு இடங்களை நோக்கி நகர்த்த தெ £டங்கினர். 2016ம் ஆண்டு ரமலான் சமயத்தில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் என்னை அணுகி அவர்களது மருத்துவமனைக்கு டாகர்டகள் தேவைப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்’’ என்று அவர் கூறியுள்ளார்.

‘‘அப்போது எனக்கு 61 வயது. இதற்கு நான் மறுத்தேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய தெரியாது என்று தெரிவித்தேன். எனினும் என்னை சிரிடே மருத்துவமனையில் பணியமர்த்தினர். முகாமில் வேலை செய்து கொண்டிருந்தபோது குண்டு பாய்ந்து இடது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் என்னை 3 முறை சுட்டார்கள்’’ என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.