சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும்  ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என  உறுதி கூறினார்.

சேலம் வடக்கு தொகுதி திமுகவேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின்  சத்திரம் பால்மார்க்கெட்டில் இருந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் வரை வீதி வீதியாகச் சென்றுபொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.  வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது, ஏராளமானோர் வருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தர். அந்த பகுதியைச் சேர்ந்த வணிகர்களும் ஸ்டாலினுக்கு வரவேற்கொடுத்து, தங்களது ஆதரவை நல்கினர். அப்பகுதியில் உள்ள கடைகளில் மோர் வாங்கிக் குடித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வராததால் உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியவில்லை. திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன், கதாநாயகி போல அமைந்துள்ளதாகவும் அதற்கு வில்லனாக அதிமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார் .

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறியவர், தற்போது வெளியாகி வரும் கருத்துகணிப்புகளில் திமுக கட்சியே ஆட்சியை பிடிக்கும் என தகவல் வெளியாகி வருகிறது,  எதிர்கட்சியே இல்லாத வகையில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சியை அமைத்திடும் என்று கூறியவர்,  திமுகவின் வெற்றி தற்போதே உறுதி செய்துள்ளதாகவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக நாமக்கல் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, ஸ்டாலினுக்கு, பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்நேயர் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.