அமராவதி: கொரோனா காரணமாக அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் தள்ளி வைப்பதாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில், உயர் கல்விக்கான மாநிலக் கவுன்சில் வழியாக பொறியியல், மருத்துவம், விவசாயம், வணிகவியல் மேலாண்மை, சட்டம் மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த தேர்வுகள் வழக்கமாக மே மாதம் நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் தள்ளிவைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்வுகளை செப்டம்பர் 3வது வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் சுரேஷ் தெரிவித்தார்.