சென்னை: டிசம்பர் மாதம் இறுதி வரை அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அரசு அலுவலகங்கள் செயல்படுவதில் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாதால், முதல்கட்டமாக 30 சதவிகித பணியாளர்களைக்கொண்டும், பின்னர் 50 சதவிகித பணியாளர்களை கொண்டும் அரசு அலுவலகங்கள் இயங்கின.

இந்த நிலையில்,  தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்துக்கு தொடங்கி உள்ளது. மேலும், மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து வரும்  7ம் தேதி முதல்  தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியார்களுடன் இயங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள தமிழகஅரசு,   வரும் டிசம்பர் மாதம் வரை வரும் அனைத்து சனிக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகமும்  100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அறிவித்து உள்ளது.

ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுமுறைகளை கணக்கில் கொண்டு தமிழகத்தில் அரசு அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு,  அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது