நாட்டிலுள்ள புண்ணிய தலங்கள் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படும்: பிரதமர் மோடி

பனாரஸ்: வாரணாசியுடன் சேர்த்து, இந்தியாவிலுள்ள பிற புண்ணிய தலங்களும் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு ஜன்கம்வடி மடத்திற்கு சென்று வழிபட்டார் பிரதமர். அப்போது உத்திரப்பிரதேச முதல்வர் மற்றும் கர்நாடக முதல்வர் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், வாரணாசியில் இருந்து இந்தூர் செல்லும் காசி மஹகல் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து வாரணாசியில் அமைக்கப்பட்ட பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மற்றும் 63 அடி உயர பஞ்ச லோக சிலையையும் திறந்து வைத்தார்

பின்னர் பேசிய பிரதமர், “சில நாட்களுக்கு முன்னர் ராமர் கோயில் கட்டுவதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறக்கட்டளை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறக்கட்டளை, ராமர் கோயில் கட்டுவதை கண்காணிப்பதுடன், முடிவுகளையும் மேற்கொள்ளும்.

தீன்தயாள் உபாத்யாயா நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. பெரிய பஞ்ச லோக சிலை இனிவரும் தலைமுறையினரையும் ஈர்க்கும். அவரின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகள் அனைவரையும் கவரும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்து அனைவரும் பேசுகிறோம். இதில், சுற்றுலாத்துறையும் அடக்கம்.

அந்த இலக்கை அடைவதில் இயற்கையைத் தாண்டி பாரம்பரிய சுற்றுலாவும் முக்கியப் பங்கு வகிக்கும். வாரணாசியுடன் இணைந்து நாட்டிலுள்ள பிற புண்ணிய தலங்களும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்தப்படும்” என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-