தமிழகம் முழுவதும் நாளை முதல் 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும்: பார்சலுக்கு மட்டுமே அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னை முதற்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. கடைகள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம்  முழுவதும் நாளை 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கட சுப்பு  இதனை தெரிவித்துள்ளார். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஓட்டல்கள் இயங்கும் என்று கூறி உள்ளார்.

பார்சல் மட்டுமே வழங்கப்படும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் வெங்கடசுப்பு தெரிவித்தார்.