வாஷிங்டன்:

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. கண்காணிப்பை மீறி நுழைவோர் கைது செய்யப்படுகின்றனர். எனினும் அமெரிக்காவுக்குள் நுழைவோரது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், “சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழையும் முயற்சியை தடுத்து வருகிறோம். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல விலங்குகள்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “ பலவீன சட்டம் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் நுழைகிறார்கள். பைத்தியகாரதனமான மற்றும் முட்டாள்தனமான சட்டங்களால் அகதிகள் வருகை அதிகரிக்கிறது. அமெரிக்காவிற்கு சட்டபூர்வமாக மற்றும் தகுதி அடிப்படையில் மக்கள் வர வேண்டும்” என்றார்.