சென்னை: ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து

சென்னை

ரும் ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சிகள்  அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

அதன்படி கொடியேற்றம், ஆளுநர் ,மாளிகையில் மாலை தேநீர் விருந்து ஆகியவை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடைய உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து சுதந்திர தின நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.