27ந்தேதி: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

(பைல் படம்)

டில்லி,

நாடு முழுவதும் வரும் 27ந்தேதி நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று  வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுடன்  மத்திய அரசு  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி யதை தொடர்ந்து,  வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்த கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வருகிற 27-ந் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமை யில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் இரு தரப்பினர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறி உள்ளார்.

You may have missed