ராகுல் தலைமையில் முதல் கூட்டம்: காங். காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது!

டில்லி,

ராகுல் காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு கூட இருக்கும் முதல் கூட்டம் இது என்பதால் பரபரப்பு நிலவி வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சியின் எதிர்காலம் தொடர்பாக, மேற்கொள்ளப்பட நடவடிக்கை குறித்தும், 2ஜி தீர்ப்பு குறித்தும்  ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும்,  குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தியின் ஓய்வில்லா பிரசாரம், பாஜகவுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தது. இதன் காரணமாக மக்களிடையே  காங்கிரசின் செல்வாக்கை உயர்த்தியதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ராகுல்காந்தி தலைமையில் நடைபெற உள்ள முதல் கூட்டம் என்பதால் காங்கிரசார் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்ர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.