நவம்பர் 26 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

டில்லி

வம்பர் 26 ஆம் தேதி அன்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் மற்றும் பணியாளர் சம்மேளனம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

இந்த மாதம் 26 ஆம் தேதி அன்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் மற்றும் ஊழியர் சம்மேளனம் இணைந்து நாடெங்கும் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது,.   இது குறித்த அறிவிப்பில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.   அவற்றில் முக்கியமானவற்றை இங்குக் காண்போம்

  1. வருமானவரி செலுத்தாதோர் குடும்பத்துக்கு மாதம் ரூ.7500 ரொக்கம் வழங்க வேண்டும்
  2. தேவைப்படுவோர் அனைவருக்கும் மாதந்தோறும் தலா 10 கிலோ இலவச ரேஷன் வழங்க வேண்டும்
  3. 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து கிராமப்புரக்களில் நடத்துவதைப் போல் நகர்ப்புறங்களிலும் ஊதிய அதிகரிப்புடன் நடத்த வேண்டும்
  4. விவசாயிகளுக்கு மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்
  5. நிதித்துறை உள்ளிட்ட எந்த துறையையும் தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். மேலும் ரயில்வே, பாதுகாப்பு தொழிற்சாலைகள், துறைமுகங்களில் தனியார் நிறுவன பங்களிப்பை நிறுத்த வேண்டும்.
  6. அரசு மற்றும் பொதுத்துறைகளில் கட்டாய ஓய்வு முறையைத் திரும்பப் பெற வேண்டும்.
  7. அனைவருக்கும் ஓய்வூதியம் என்னும் அடிப்படையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அனைவரையும் கொண்டு வந்து பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.