பெட்ரோல் டீசல் விலை உயர்வு: டில்லியில் 17ம் தேதி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

டில்லி:

தினசரி அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அவசர செயற்குழு கூட்டம் வரும் 17ந்தேதி டில்லியில் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் தினசரி விலை உயர்வு காரணமாக, சரக்குகள் கொண்டு செல்வதில் பிரச்சினை ஏற்படுவதால் அதுகுறித்து விவாதிக்க அகில  இந்திய மோட்டார் காங்கிரஸ் அவசர செயற்குழு கூட்டம் வரும் 17ந்தேதி நடைபெற்றும் என்றும் மிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் தகவல் அளித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்கக் கட்டணத்தை ரத்துக் செய்யக்கோரியும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள  காப்பீடு கட்டணம் தொடர்பான அறிவிப்பை திரும்பப் பெறக்கோரியும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டம் வரும் 17ந்தேதி டில்லியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.