சென்னை:

கில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான  மருத்துவப் படிப்பு கலந்தாய்வு (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) நாளை ( ஜூலை 13-ம் தேதி) தொடங்க உள்ளது.

இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்படும் 15 சதவிகித அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நாளை  தொடங்கப்பட உள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இணையதளம் வழியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்காக  தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இருந்து 456 எம்.பி.பி.எஸ். இடங்களும், 30 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் ஜூலை 15-ம் தேதி வெளியிடப்படும்.

முதல்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள், ஜூலை 16 முதல் 22ம் தேதிக்குள் குறிப்பிட்ட கல்லூரிகளில் சேர வேண்டும்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறும்.

இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்படும். 2ம் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்த வர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் 16 ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.

அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் ஆகஸ்ட் 16ம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு, மாநில அரசின் ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது.