Random image

‘அனைந்திந்திய மொழிகளும் நமதே’: தாய்மொழி கல்வி தேவை! மோகன் பகவத்

டில்லி:

ர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு  தலைநகர் டில்லியில் நடைபெற்று  வருகிறது.  இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தமாநாட்டில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், “ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆங்கிலம் உள்பட எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல என்று கூறினார். . எந்தவொரு வெளிநாட்டு மொழிக்கும் விரோதமாக ஆர்எஸ்எஸ்  இல்லை என்றவர்  மற்ற மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதேவேளையில், தாய்மொழி கல்வி தேவை. அதற்காக, முதலில் நம் மனதை அதற்கேற்றால் போல்அமைத்துக் கொள்ள வேண்டும்….  அனைத்து இந்திய மொழிகளும் நம்முடையது என்று கூறினார்.

மேலும்,  ஆங்கிலத்தில் புலமை பெற்ற பேச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். நமது கலாச்சாரத்தையும் நவீன கல்வி முறையையும் உள்ளடக்கிய புதிய கல்விக்கொள்கை தேவை” என்ற பகவத்,  “பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் எதிர்க்கப்பட வேண்டியவையே. இதில், எப்போதும் இரட்டை நிலைப்பாடு கிடையாது என்றார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஏற்றுக்கொள்ளாது என்றவர், அயோத்தியில் ராமர் கோவில் விரைந்து கட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.