டில்லி

ச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை அடுத்து அனைத்து 31 இடங்களும் நிரப்பப் பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் பரிந்துரையின் பேரில் நீதிபதிகள் நியமிக்கப் படுகின்றனர். உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 31 நீதிபதி பதவி பணி இடங்களில் 27 பேர் மட்டுமே பதவியில்  இருந்து வந்தனர். காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு கொலிஜியம் கூடி 4 நீதிபதிகள் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் இருந்ததால் நீதிபதிகள் நியமனம் சற்று தள்ளிப் போனது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று நீதிபதிகள் அநிருத்தா போஸ், ஏ எஸ் போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ண கவாய்,மற்றும் சூரியகாந்த் ஆகியோருக்கு ஒப்புதல் அளித்தார்.

தேர்தல் முடிவு நேற்று வெளியானதை ஒட்டி இந்த நால்வரும் இன்று பதவி ஏற்றுள்ளனர். தற்போது உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணி இடங்களும் நிரப்ப்ப பட்டுள்ளன.

நீதிபதி கவாய் மும்பை உயர்நீதிமன்றத்திலும், சூரியகாந்த் இமாசல பிரதேச தலைமை நீதிபதியாகவும், அநிருத்தா போஸ் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் போபண்ணா கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்கள் ஆவார்கள்