சென்னை: 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 5-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் வேலை நிறுத்தத்தில்,  தொழிற்சங்களும் பங்கேற்கும் என்று அறிவித்து உள்ளன.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை அதிமுக உண்ணா விரத போராட்டம் நடத்துகிறது. அதுபோல வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் கடை அடைப்பு நடத்துகிறது.

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள தொ.மு.ச. அலுவலகத்தில் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

இதில் திமுக, ஏஐடியூசி  உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி,

வரும் 5ந்தேதி அனைத்து கட்சிகள் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில், அனைத்து தொழிலாளர்களும் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அன்று,  அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும்,  சென்னை அண்ணாசாலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.