நாளை முதல் சென்னையில் இறைச்சிக் கடைகள் மூடல்

சென்னை

நாளை முதல் 30 ஆம் தேதி வரை சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் சென்னையில் மிகவும் அதிகமாகப் பாதிப்பு உள்ளது.

இதையொட்டி நாளை முதல் 30 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

சென்னை மாநகராட்சி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை நகரில் அனைத்து வகையான இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகளை நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூட உத்தரவு இடப்பட்டுள்ளது.

அத்துடன் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.