ஈரானில் அனைத்து மசூதிகள் இன்று திறப்பு

தெஹ்ரான்:
ரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்லாமிய மேம்பாட்டு ஆணைய தலைவர் முகமத் கஸ்மி தெரிவிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சகத்தை கலந்தாலோசித்த பின்னரே மசூதிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தென்மேற்கு ஈரானில் ஒரு மாவட்டம் பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. கவுண்டி அமைந்துள்ள குஜெஸ்தான் மாகாணத்தின் ஆளுநரை மேற்கோள் காட்டி, மாகாணத்தில் புதிய வழக்குகளில் கூர்மையான உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தென் மேற்கு ஈரான் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அந்த செய்தியில் குஜெஸ்தான் மாகாணத்தின் ஆளுநர் வசிக்கு பகுதிகளில் அதிகமானவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதை முன்னிட்டு இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைவாக பதிவானதை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை, 180 ஈரானிய நகரங்களில் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன.

இருப்பினும் தலைநகர் தெஹ்ரான் மற்றும் வேறு சில முக்கிய நகரங்களில் இன்னும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளை மீண்டும் தொடங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள 132 மசூதிகள் கடந்த திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இதுமட்டுமின்றி அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வலைத்தளம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏற்கனவே நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் மற்றும் மால்களுக்கான தடையை நீக்கியுள்ளது. பெரிய ஷாப்பிங் மையங்கள் மீண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரானின் கொரோனா வைரஸ் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 45 அதிகரித்து, 6 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தெரிவித்துள்ளார். நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 286 ஐ எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் ஒன்றான ஈரான், ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது பொருளாதரத்தை தக்க வைப்பதற்காக சாதாரண வாழ்க்கைக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியது. கட்டுப்பாடுகளை தளர்த்துவது நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர்.

தொழில்துறை, சுரங்கங்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் ரெசா ரஹ்மானியை மாற்றுவதாக ரூஹானி கடந்த திங்களன்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும் அந்த அறிவிப்பில், ரெசா ரஹ்மானிக்கு பதிலாக ஹொசைன் மொடரேஸ் கியாபானி, தொழில்துறை, சுரங்கங்கள் மற்றும் வர்த்தக அமைச்சக பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ரஹ்மானி ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.