சென்னை:

டப்பாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், பாஜகவின் அடைந்து வரும் தொடர் தோல்வி, இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சிதான் என்பதை நிருபித்து உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

2வது முறையாக அரியணை ஏறிய மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்கள் விரோத மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்கி வருகிறது.

முத்தலாக் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான சட்டத்திருத்தம், தற்போது அமல் படுத்தி உள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் போன்றவற்றால் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

இத்துத்வா கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக நாடு முழுவதும்  கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதே வேளையில் இன்று வெளியாகி உள்ள ஜார்கண்ட் தேர்தல் முடிவும், பாஜக அரசுக்கு சாவுமணி அடித்துள்ளது. அங்கு பாஜக மாநில அரசு மண்ணை கவ்வி உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

ஏற்கனவே, அரியானா மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆட்சியை இழந்த பாஜக தற்போது ஜார்கண்டிலும் ஆட்சியை இழந்துள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ஏற்கனவே அரியான மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக மாநில அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது ஜார்கண்டிலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளது என்பதை சுட்டி காட்டி உள்ளார்.

இந்த நிகழ்வுகள், நடப்பாண்டில் பாஜவின் வீழ்ச்சியை உறுதிப்படுத்தி உள்ளது என்றும், நாட்டின் அரசியலமைப்பை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சிதான் என்பதை ‘பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.