ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! ஸ்டாலினுக்கு மம்தா கடிதம்

சென்னை:

னநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு  கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சென்னையில் நேற்று திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் திரண்ட மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.

லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த கண்டனப் பேரணியால் சென்னையே குலுங்கியது. இந்த பேரணி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில்,  குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த மோசமான ஆட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் , இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற அமைதியான, தீவிரமான போராட்டங்கள் தேவை. இதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு,  போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு  அழைப்பு விடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CAAProtest, democracy, Mamata Banerjee, Mamata's letter to Stalin, MK Stalin, mobilize defend democracy, Opposition parties, Opposition parties should be mobilize, westbengal cm, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின்
-=-