ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துபோராட்டம் நடத்த உள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில நாட்களக பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா தனது உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அடியோடு நிறுத்தி விட்டது. பாகிஸ்தானில் பல உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் பல இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளது.

இதனால் தற்போது ஆட்சி நடத்தும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி மீது எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று பாகிஸ்தான் எதிர்கட்சியான பிபிபி கட்சியின் தலைவரும் மறைந்த பெனாசிர் புட்டோவின் மகனுமான பிலாவல் புட்டோ ஜர்தாரி ரம்ஜான் விருந்து நடத்தினார். அதில் பங்கு கொள்ள அனைத்து எதிரிக்கட்சியினரையும் அழைத்தார். அக்கட்சியின் முடிவில் அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

பிலாவல், “இன்று நான் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் இஃப்தார் விருந்துக்கு அழைத்தேன். அவர்கள் அனைவரும்  வந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இனி அடிக்கடி சந்தித்து பாகிஸ்தான் நாட்டு மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வு காண முடிவு செய்துள்ளோம்.

அதன் முதல்படியாக ஜேயுஐ எஃப் தலைவர் மவுலானா ஃபசூர் ரகுமான் ஒரு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட உள்ளார். அதில் இந்த அரசுக்கு எதிரான கூட்டுதீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

ஈத் பண்டிகைக்கு பிறகு அனைத்து கட்சிகளும் இணைந்து பாராளுமன்ரத்தின் உள்ளேயும் வெளியேயும் போராட்டங்கள் நடத்த உள்ளோம். மேலும் அடுத்து நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்ட்த்தில் தற்போது பாகிஸ்தான் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படும்” என தெரிவித்தார்.

ஜேயுஐ எஃப் கட்சியின் தலைவர் மவுலானா, “பாகிஸ்தான் தற்போது உலகின் மிகவும் பலவீனமான நாடாக உள்ளது. இதற்கு கரணம் திறமையற்றவர்கள் ஆட்சி நடத்துவதாகும். தற்போதும் முழுகும் கப்பலாக உள்ள நமது நாட்டை மீட்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.” என தெரிவித்தார்.

பிஎம்எல் என் கட்சியின் தலைவர் சாகித் ககான் அப்பாசி, “இந்த அரசின் செயலை முடக்க எதிர்க்கட்சிகள அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளோம். ஈத் பண்டிகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த திட்டத்தை வடிவமைப்போம்.

எதிர்க்கட்சிகள் கொள்கை அளவில் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் இந்த ஆட்சியை தூக்கி எறிய ஒன்றிணைவரார்கள். ஏனெனில் அனைத்து கட்சியினருக்கும் நாட்டின் முன்னேற்றமென்பது அடிப்படை கொள்கையாகும். அத்துடன அனைவரும் பண வீக்கத்துக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் எதிராக போராட தயாராக உள்ளனர்” என தெரிவித்தார்.

இதே கருத்தை அனைத்துக்கட்சியினரும் தெர்வித்துள்ளனர்.

இது குறித்து பிலாவல், “இன்று பாகிஸ்தான் வரலாற்றில் முக்கியமான நாள் ஆகும். முன்பு பெனாசிர் புட்டோ ஆரம்பித்த எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இயக்கம் இன்று மீண்டும் நடந்துள்ளதை எண்ணி அவர் ஆன்மா சாந்தி அடையும். அல்லாவுக்கு நன்றி. தற்போதைய தலைமுறையினர் மிகவும் அறிவு முதிர்ச்சியுடன் உள்ளனர். இதன் மூலம் நமது எதிர்காலம் பாதுகாப்பு அடையும்” என தெரிவித்துள்ளார்.