ஏப்ரல் 25:  பொது வேலை நிறுத்தம்

 

வரும் ஏப்ரல் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்துவதாக தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

தி.மு.க  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகம் முழுதும் வேலை நிறுத்தப்பபோராட்டத்தை நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.கவின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.