Random image

‘பாரத் பந்த்’ஐ வெற்றி பெறச் செய்வோம்: தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

டில்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து 10ந்தேதி நாடு முழுவதும்  ‘பாரத் பந்த்’ நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில்  நாடு தழுவிய பந்த் குறித்து இன்று முற்பகல் தமிழக  காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 10ந்தேதி நடைபெற உள்ள  ‘பாரத் பந்த்’ஐ வெற்றி பெறச் செய்வோம் என அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒருமனதாக தெரிவித்து உள்ளனர்.

இதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்  ன்று காலை 11 மணிக்கு  காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது..

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளபடி,  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை  உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக வரும் 10ந்தேதி  நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில், கலந்துகொண்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்வோம் என்றும் உறுதிபூண்டனர்.