திங்கட்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் தொடர்பான 3  சட்ட திருத்த மசோதாக் களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து, ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக அறிவித்து உள்ளது.

        இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கழக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், ‘விவசாயிகளுக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 சட்டங்கள்’ குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டம்; 21-09-2020 அன்று காலை 10 மணிக்கு சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.