டில்லி :

“2022 ம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் “ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“மாநில தலைமை செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “திட்டங்களின் செலவுகள் அதிகரித்து வருகிறது. ஆகவே மத்திய அரசின் திட்டங்கள் தாமதமாவதை நாட்டு மக்கள் மறந்து விடவில்லை.

2022 ம் ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். அதற்குள் அனைத்து துறைகளும், தங்களின் துறைகளில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும்.

அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் துரிதமாக செயல்பட்டு, அனைத்து வணிகர்களும் ஜிஎஸ்டி.,யின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 15 ம் தேதியை இலக்காக எடுத்துக் கொண்டு அதற்குள் ஜிஎஸ்டி பதிவு பணிகளை நிறைவு செய்ய வேண்டும்” என்றும் மோடி தெரிவித்தார்.