அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்! சுனில் அரோரா…

சென்னை: 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிடும் உள்ள தலைமை தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுனில அரோராகொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம்  என்றவர் ஏற்கனவே கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் தேர்தலை நடத்தியதை சுட்டிக்காட்டினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகவும் கூறினார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் உடனே அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.