ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், அந்த தெருவில் உள்ள அனைவருக்கும் சோதனை…

சென்னை:

சென்னையில் உள்ள ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா பாசிடிவ் என உறுதி செய்யப்பட்டால், அந்த தெருவில் உள்ள  அனைத்து குடியிருப்பாளர்களும் கொரோனா சோதிக்கப்பட வேண்டும், இதற்கான சோதனை இன்று (30ந்தேதி)  தொடங்குவதாகவும்  சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. அதிகப்பட்ச மாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1200 பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. சென்னையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,575ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவித்து உள்ளது.

அதன்படி, ஒரு தெருவில் 3க்கும் மேற்பட்டோரக்கு கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால், அந்த தெருக்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என்றும்,  அநத் பகுதிகளில்  உள்ள வீடு, கடைகள் என அனைத்து தரப்பினரிடமும்,  நோய் தொற்று பரவாமல் தடுக்க பரிசோதனை செய்யப்படும்.

இதற்காக செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் ஆகியோர் சனிக்கிழமை முதல் ஆட்டோவில் தேவையான உபகரணங்களுடன் ஆட்டோவில் வந்து சோதனை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி  தினசரி 2 குழுக்கள் ஒவ்வொரு தெருவிலும் சோதனை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே சென்னை மாநகரத்தில் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து கூறிய சுகாதாரத்துறை இணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, “நோய் தொற்று பரவுவதை க் குறைக்க, நோயாளியின் குடும்பபிரச்சனை மற்றும் நேர்மறை நோயாளி தொடர்புகளை தாங்களாகவே பரிசோதித்துக்கொள்ளவும்,  மற்றும் ஆரம்ப த்திலேயே நோயாளிகளைக்கண்டறிய வும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தெருவில் உள்ள அனைவரையும் பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.

சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொரேனா நோயாளிகளுடன் 15% தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.