அரைசதம் அடித்த ஆல்ரவுண்டர் ஆட்டமிழந்தார் – இங்கிலாந்து 136/5

அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியில், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஜோ ரூட் உடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தார் ஸ்டோக்ஸ். ஆனால், சிறிதுநேரத்தில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார். ஆனாலும், கலங்காத ஸ்டோக்ஸ், பின்னால் வந்த ஓலி போப்புடன் கூட்டணி சேர்ந்தார்.

மொத்தமாக 121 பந்துகளை சந்தித்து, 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 55 ரன்களை எடுத்த நிலையில், சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தற்போது, போப்புடன், டான் லாரன்ஸ் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் தடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர் இந்திய பெளலர்கள்.