டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ்!

பெங்களூரு,

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்துள்ளது.

இரு அணிகளும், தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தொடரில் விலகுவதாக அறிவித்து உள்ளார்.

அவரின் தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடைபெற இருக்கும் மற்ற  இரு டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என்றும், அவர் ஓய்வுக்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், பெங்களூரு டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக போராடும் என்றும் எங்களிட்ம் மிட்சல் ஸ்டார்க் என்னும் கூரிய ஆயுதம் உள்ளது என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவ்ர் மிட்சல் ஸ்டார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது தொடர் போட்டி வருகின்ற 16-ந் தேதி ராஞ்சியில் நடக்கிறது.

1 thought on “டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ்!

Leave a Reply

Your email address will not be published.