ஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதலமைச்சர் அலுவலகம் அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அம்மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:

கல்லூரிகள், பள்ளிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 2ம் தேதி வகுப்புகள் தொடங்கும்.

6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாளும், வேலையானது அரை நாள் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.